Monday, February 28, 2011

பெருநகரத்தின் ஆறுதல்..

பெருநகரத்தின் வேர்க்கால்களில்
சிக்கித் தவிப்பதாய்
அவள் புலம்பிக் கொண்டிருப்பாள்..

பெருநகரத்தின் நாகரிகம்
அதிகமாய் அச்சுறுத்துவதாய்
அவள் அரற்றிக் கொண்டிருப்பாள்..

பெருநகரத்தின் கரும்புகைகளில்
ஆரோக்கியம் அழிவதாய்
அவள் அழுது கொண்டிருப்பாள்..

முதன்முறையாய்
அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்,
பெருநகரத்தின் இரைச்சல்களில்
அழுகையை கரைத்தவளாய்..