ஆளில்லா அறைகள்..
அலறாத தொலைக்காட்சி..
அழையாத கைபேசி..
விரல்படாத அழைப்புமணி..
திறக்காத சன்னல்கள்..
தீண்டாத குளிர்காற்று..
சுழலாத மின்விசிறி..
சத்தமிடாத சுவர்க்கோழி..
இசையற்ற இரவுகள்..
புன்னகையற்ற பகல்கள்..
முத்துக்களற்ற கொலுசு..
மூச்சுத் திணறும் தனிமை..
திகட்டும் தனிமைகளில்
தூங்கி வழிகின்றன
என் கனவுகள்..
இப்பொழுதெல்லாம்,
என்னறைகளில்,
ஒட்டடைகள்
நீக்கப்படுவதில்லை..
இருந்தும் நான்,
தனிமை பழகுகிறேன்..
கண்ணீர் கரைக்கும்
தலையணைக்காகவும்,
தோள் தாங்கும்
சுவர்களுக்காகவும்..
(உரையாடல் கவிதை போட்டிக்காய் எழுதியது..
http://tamil.blogkut.com/uraiyaadal.php )
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
தனிமை பழகலாம். ஆனால் பலகாலம் வாழ்கிற மாதிரி இருக்கு
தனிமை கொடுமை கொடுமையே
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிகவும் பிடித்திருக்கிறது
வெற்றிபெற வாழ்த்துக்கள்
விஜய்
மிகவும் அருமை ரமா...all the very best for u...
@sethu
Thanks sethu
@Vijay
Thank you sir for ur visit and comments..
@Akka
Thanks a lot akka..
nice..
வெற்றிபெற வாழ்த்துக்கள் .. :)
கவிதை மிகவும் நன்றாக உள்ளது தோழி, வரிகள் மிக அழகு..கவிதை போட்டியில் வெற்றி பெற என் மனமார்த்த வாழ்த்துக்கள்...
நன்றி ஆறுமுகம், கமலேஷ்.. :)
Akka,
padichittu kannulam kalangittu ka., so cute.. miss u ka..
thanimaiyile inimai
all the best
padma
ரமா "வெற்றி"!!!!!!!
அழகு கவிதை..........
Nalla Irukkunga.... வெற்றி பெற வாழ்த்துகள்....
Nalla irukkunga... வெற்றி பெற வாழ்த்துகள்...
romba nalla iruku rama
nice one thozhar...
anaivarukkum nandri.. :)
Post a Comment