Wednesday, November 23, 2011

நான், அவன் மற்றும் நிலா

என்னிலிருந்து நிலவுக்கும் அவனுக்குமான
இடைவெளியில் அதிக வேற்றுமையொன்றுமில்லை.
என் கேள்விகளுக்கான பதில்களில்
அவனைப்போலவே நிலவிலும் மௌனம்.
என் கேவல்களின் தேற்றலில்
நிலவைப்போலவே அவனிலும் பொறுமை.
எனினும் நான் நிலவோடு பேசும்போதும்
அவனோடு கொஞ்சும்போதும் ஒருவருக்கொருவர் குறுக்கிடுவதில்லை.
சில நேரங்களில் நிலவில் ஆறுதல்களும்
அவனில் பதில்களும் கிடைப்பதுண்டு.
என்றோவொரு நாள் நிலவு மட்டும் மிச்சமிருக்கும்
எனக்கும் அவனுக்குமான இடைவெளியில்.
இடைவெளியின் அளவு பூஜ்யமாகவும் முடிவிலியாகவும் இருக்கலாம்.

3 comments:

ராம்குமார் - அமுதன் said...

இடைவெளியின் அளவு பூஜ்யமாகவும் முடிவிலியாகவும் //

நல்ல வார்த்தை பிரயோகம்... வாழ்த்துக்கள்...

சுரபி said...

நன்றி.. :)

SowmiyaNarayanan said...

நான், அவன் மற்றும் நிலா"
வாழ்த்துக்கள்...

முடிந்தால் என்ன வலைப்பதிவை பார்க்கவும்\
WWW.SOWMI-
KATTRADHUTAMIL.BLOGSPOT.COM.