Friday, October 17, 2008

பறந்து போன பட்டுச்சிறகுகள்..

சிறகுகள் வளராத
பறவையாகத்தான்
வெளியுலகம் வந்தேன்..

கூட்டுக்கிளியாய் இருந்தது
போதுமென்று கொஞ்சம்
சிறகுகள் வளர்த்தேன்..
வளர்ந்த சிறகுகள்
வஞ்சனை துரோகம்
கேலிகள், கிண்டல்,
ஏமாற்றம் என எதையும்
ஏற்றுக்கொள்ள முடியாத
இளஞ்சிறகுகளாகவே இருந்தன..!!

எல்லாம் தெரிந்தும்
எத்தனையோ முறை
பறக்க முற்பட்டு
பல்லுடைந்த பறவையாய்..!!

இடிகள் விழ இனியும்
இடமில்லை மனதில்..
ஆயினும்..
சிறகுகள் முழுதும்
கவலை ரேகைகள்..
கலியுலகம் என்றாலும்
கரையேற வேண்டுமே..??

பட்டாம்பூச்சிகளின் பரிணாமம்
பாரங்கள் தாங்குவதில்லைஎன
சிந்தித்து சிலபொழுதுகள்
சிறகுகள் சீவுகிறேன்..

சீவிய சிறகுகள் சிலநேரங்களில்
சிலரது சிரங்களையும்
என்னின் சிரத்தையும்
குத்திய போது
குனிந்து தேடுகிறேன்
பறந்து போன
பட்டாம்பூச்சியின் பட்டுச்சிறகுகளை..!!!

என்ன வாழ்க்கையடா இது???

Thursday, October 16, 2008

என் யாசகம் உன் வாழ்க்கை..

ஆகிறது அரை வருடம்,
அவளும் நானும் பிரிந்து!!

காதலைச் சொல்லி காத்திருக்கையில்,
கள்ளச்சிரிப்புடன் சரியென்றுதான் சம்மதித்தாள்..
கூடவே சிரித்தது விதியும்..

பெற்றோருக்கு கொள்ளியிட விருப்பமின்றி
பொசுக்கினாள் மனதையும் காதலையும்..
அவசரமாய் அமைக்கப்பட்ட வாழ்வு
அழுகையுடன் முடிவுற்றது அவளுக்கு..

இன்றும் இருக்கிறேன் உனக்காக பெண்ணே..
இன்னொரு வாழ்க்கை வேண்டாமென்று
இனியும் என்னை அழவைக்க நினைக்காதே..
நம் காதலின் சாட்சியாய்
நான் வைத்திருக்கும்
கடைசி பரிசுப்பொருள் என் கண்ணீர்..

என் வாழ்விற்காய் யாசிக்கிறேன்,
உன் மிச்ச வாழ்க்கையை பிச்சையிடுவாயா?