சிறகுகள் வளராத
பறவையாகத்தான்
வெளியுலகம் வந்தேன்..
கூட்டுக்கிளியாய் இருந்தது
போதுமென்று கொஞ்சம்
சிறகுகள் வளர்த்தேன்..
வளர்ந்த சிறகுகள்
வஞ்சனை துரோகம்
கேலிகள், கிண்டல்,
ஏமாற்றம் என எதையும்
ஏற்றுக்கொள்ள முடியாத
இளஞ்சிறகுகளாகவே இருந்தன..!!
எல்லாம் தெரிந்தும்
எத்தனையோ முறை
பறக்க முற்பட்டு
பல்லுடைந்த பறவையாய்..!!
இடிகள் விழ இனியும்
இடமில்லை மனதில்..
ஆயினும்..
சிறகுகள் முழுதும்
கவலை ரேகைகள்..
கலியுலகம் என்றாலும்
கரையேற வேண்டுமே..??
பட்டாம்பூச்சிகளின் பரிணாமம்
பாரங்கள் தாங்குவதில்லைஎன
சிந்தித்து சிலபொழுதுகள்
சிறகுகள் சீவுகிறேன்..
சீவிய சிறகுகள் சிலநேரங்களில்
சிலரது சிரங்களையும்
என்னின் சிரத்தையும்
குத்திய போது
குனிந்து தேடுகிறேன்
பறந்து போன
பட்டாம்பூச்சியின் பட்டுச்சிறகுகளை..!!!
என்ன வாழ்க்கையடா இது???
Friday, October 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையாக இருக்கிறது.
சில வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன் உண்மையாகவே...
Thanks a lot thilak for ur comments..
Post a Comment