ஆகிறது அரை வருடம்,
அவளும் நானும் பிரிந்து!!
காதலைச் சொல்லி காத்திருக்கையில்,
கள்ளச்சிரிப்புடன் சரியென்றுதான் சம்மதித்தாள்..
கூடவே சிரித்தது விதியும்..
பெற்றோருக்கு கொள்ளியிட விருப்பமின்றி
பொசுக்கினாள் மனதையும் காதலையும்..
அவசரமாய் அமைக்கப்பட்ட வாழ்வு
அழுகையுடன் முடிவுற்றது அவளுக்கு..
இன்றும் இருக்கிறேன் உனக்காக பெண்ணே..
இன்னொரு வாழ்க்கை வேண்டாமென்று
இனியும் என்னை அழவைக்க நினைக்காதே..
நம் காதலின் சாட்சியாய்
நான் வைத்திருக்கும்
கடைசி பரிசுப்பொருள் என் கண்ணீர்..
என் வாழ்விற்காய் யாசிக்கிறேன்,
உன் மிச்ச வாழ்க்கையை பிச்சையிடுவாயா?
Thursday, October 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை.
///நம் காதலின் சாட்சியாய்
நான் வைத்திருக்கும்
கடைசி பரிசுப்பொருள் என் கண்ணீர்...///
ஒரு கணம் இந்த வரிகளில் நின்று விட்டேன்.
Post a Comment