Monday, December 14, 2009

பிரிவுக்காலம்..

நெடுநேர மௌனத்தின்
கூர் விளிம்பில்,
விழியும் காகிதமும்
விரும்பியிருந்தது சில
நீர்த் துளிகள்...

இன்னும் நீண்ட
அம் மௌனத்தின்
முற்றுப்புள்ளியில்,
காகிதம் நிரம்பியிருந்தது,
உன் ஒற்றை பெயரில்...!
கண்கள் ஏனோ சிரித்திருந்தது.

8 comments:

Rajthilak said...

நாந்தான் இப்படின்னா நீங்களுமா?

///
காகிதம் நிரம்பியிருந்தது,
உன் ஒற்றை பெயரில்...!
கண்கள் ஏனோ சிரித்திருந்தது.
///

இது போதாதா?

திஸ் டூ ஷல் பாஸ்

சுரபி said...

//திஸ் டூ ஷல் பாஸ் //

ஆம்.. நிகழ்வுகள் கடந்து போகும்.. உறவுகள் என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது..

(தம்பி கூட போட்ட சண்டைல எழுதினது.. :P)

நன்றி திலக்..

Unknown said...

பிரிவுக்காலம், மென்மையாக.. மிக இயல்பாக கவிதையாக வடிந்துள்ளது...

nice..

சுரபி said...

Nice to see u here aarumugam.. Thanks for coming and posting ur thoughts.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ரொஃபைல் கோபக்கவிதை அழகு..

சுரபி said...

Mikka nandri vasanth.. :)

திருவாரூர் சரவணா said...

பரிசுப்போட்டிக்கு அனுப்பியிருந்த நில்...கவனி...பயணி... சிறுகதையைப் படித்துவிட்டு கருத்து சொன்னதுக்கு நன்றி. இந்தக் கவிதை மட்டுமல்ல...நீங்கள் வடிவமைத்துள்ள பக்கமும் எதோ ஒரு வழியைத்தான் சொல்கிறது. என்னைப் போல் மெகாத் தொடர் கணக்காக கதைகள் எழுதி விடலாம் . ஆனால் சில வார்த்தைகளை மட்டும் வைத்தது கவிதை படைப்பது எல்லோராலும் முடியாத ஒன்று. முயற்சியைத் தொடருங்கள். வழிகளை மட்டுமல்ல...வசந்தங்களையும் பதிவு செய்யுங்கள்.

சுரபி said...

தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சரண்... :)