இலக்கணமும் இலக்கியமும்
ஈரைந்தாம் வகுப்பின்
இறுதிச் சடங்கோடு
இடுகாடு போய்விட்டது..
காவியமும் காப்பியமும்
கிலோ பத்துரூபாய்க்கு
கிடைக்கவில்லை கீழத்தெரு
கிழவன் கடையில்..
கவிக்கொம்பன் வீட்டுக்
கட்டுத்தறியும் கவிபாடுமென்று
தறியெடுத்துச் சுட்டுக்கொண்டால்
தருவதெல்லாம் கவியாகுமா??
பாரதி..பாரதிதாசன்..
படித்து புரிந்ததில்லை..
கம்பன்..கண்ணதாசன்..
கவனித்து கற்றதில்லை..
எனினும் நான்
இயல்புக் கவிஞன்..
எனக்குத் தேவையில்லை
எழுத்தின் முகவரிகள்..
வீதியோர விடிவிளக்கில்
விக்கி விம்முகிறது
வெண்பாவும் விதிகளும்..
வேண்டவே வேண்டாம்..
வானம்..அதிலொரு நிலா..
காதல்..அதற்கொரு பெண்..
கிறுக்க இது போதும்..
நீளம் குறைத்து,
அகலம் அடக்கி,
வந்து விழுந்த
வார்த்தைத் துளிகளை
வடித்துக் கொட்டுகிறேன்,
வளரும் கவிஞனாவதற்கு
வாழ்த்துகள் தேடி..
பொய்யான விமர்சனத்தில்
பொய்த்து, புழு அரித்து,
சீழ்படிந்து சாகும்முன்
காப்பாற்றுங்கள் - என்
காயமுள்ள கவிதைகளை..
Monday, November 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கண்டிப்பா காப்பாத்தறோம் ! கவலைப்படாதீங்க :)
Ha ha ha.. Nandri Thilak..... :-)
superb......... :-)
Nandri aarumugam.. :)
உங்கள் சுய அறிமுகம் மிகவும் கவர்ந்தது
தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜோதிஜி... :)
Post a Comment