பயண நீட்சியின்
வெப்ப ஸ்பரிசத்தில்,
விரல்கள்
சுற்றிக் கொண்டேன்
முகம் காட்டாதவொரு
பூவின் கைகளோடு..
அப்பூவிற்கும்
தேவையாயிருக்கவில்லை
என் முகவரி..
வியர்வையின் குளுமையே
போதுமானதாயிருந்தது..
விளையாட்டுப்
பொருளானது விரல்கள்..
இழுவையோ ..
அழுத்தமோ..
எச்சிலோ..
விரல்கள் சிரித்தன..
ஸ்பரிசங்கள் தூரமாயின
நிறுத்தத்தின்
அருகாமையில்..
இறங்கிச்செல்லும்
கடைசி தருணத்தில்
நெருடுகின்றன,
வெற்று வெளியில்
இன்னும்
பற்றுதலுக்கான
தேடல் கொண்டிருக்கும்
அந்த பூவின் விரல்கள்..
Friday, April 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நன்றி திண்ணை/உயிரோசை...
மிக இயல்பாகவும்,அழகாகவும் பூத்திருக்கின்றது "வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்"..:)
Post a Comment