Monday, April 12, 2010

புன்னகையெறிதல்..

வெளிவாயிற் கதவின்
கம்பியிடுக்குகள் வழியே
நாயொன்றிற்கு
எறியப்படும் ஒரு பிஸ்கட்டில்
பரிமாறப்படுகிறது,
சிறுவனுக்கும்
பிச்சை மறுக்கப்பட்ட
கிழவனுக்குமான முகவரி..

(கிறுக்கலாய் சில பக்கங்களுக்கான "அழகிய புன்னகை" தாங்கிய கவிதை..

இருக்கா?? புன்னகை??)

1 comment:

Unknown said...

புன்னகை இருக்கு..

கவனிக்க : வாசகன் குழப்பமடையவும் வாய்ப்பிருக்கு..