அவன் அவனைப்பற்றியே சிந்தித்திருந்தான்..
அவனது காகிதங்களில் அவனே மூழ்கியிருந்தான்..
அவனைப்பற்றிய நினைவுகளைப் பதிவதென்பது
அவனுக்கு மிக எளிதாயிருந்தது..
அலங்கார சட்டமிட்ட கண்ணாடிகளில்
அவன் அழகாக பிரதிபலிக்கப்பட்டான்..
அவளும் அப்படித்தான்..
அவளுடைய உலகம் அவளாய் மட்டுமேயிருந்தாள்..
அவளது இறுக்கங்களைப் பிழிந்துவிட்டு
இறகுகள் பெற்றுக்கொண்டாள்..
பூக்கள் கோர்த்த மாலைகளில்
அவள் புன்னகை வழியவிட்டாள்..
பின்னொரு நாளின் மாபெரும் பொருட்காட்சியில்
அதிகமாகப் பார்வையிடப்பட்டது
அவளது மாலையிட்ட
அவனது புகைப்படச் சட்டம்...
Monday, June 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment