கவிதைகள் சரணடைகின்றன
அவளது ஒற்றைக்குடுமியிலும்
நெற்றி படர்ந்த முடிகளிலும்..
கவிதைகள் உயிர்த்தெழுகின்றன
அவளது கருவிழிகளிலும்
மெல்லிய உதட்டுச் சுழிப்பிலும்..
உயிர்த்தெழுந்த கவிதைகள்
மீண்டும் சரணடைகின்றன
அவளது கன்னங்களினோர
கரிய நிலவுகளில்..
இனியெங்கு உயிர்த்தெழ?
காத்திருக்கின்றன கவிதைகள்
அவளது மழலைமொழி கேட்க..
Monday, June 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment