தொடர்பற்றிரு;
பொருளோ புகழோ
உணவோ உயிரோ
இன்னபிறவோ..
தொடர்பற்றிருக்கட்டும்
புத்தியும் மனமும்..
ஆன்மா அமைதியுருமென்று
ஆன்மிகம் அறிவுறுத்தியது..
இறுகப் பற்றியிருக்கும்
புவியீர்ப்பின்
வேர் தேடியலைகிறேன்
தொடர்பற்றிருக்க.
Friday, February 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
முக்தி?
முக்திலாம் இல்லங்க.. ஒரு புத்தகத்தில் படித்த கதைய மையமா வச்சு எழுதினது..
ஒரு ராணுவ அதிகாரி ரிட்டயர்டு ஆனதுக்கபுறம் வீட்ட துடைச்சுட்டு இருந்தாராம்.. அப்போ ஒரு கண்ணாடி சாமான் தவறி கீழ விழ போச்சாம்.. அவர் அதிர்ந்து அவசரமா பிடிசுட்டாரம்.. படபடனு அடிச்சுகிச்சாம்.. அப்புறம் இத்தனை நாள் கம்பீரம எதையும் துச்சமாய் நினைத்த நான் இன்று ஒரு கண்ணாடி பொருளுக்காய் பதறிவிட்டனேனு நெனச்சு அந்த கண்ணாடி பொருளை போட்டு உடைத்தாராம்.. அப்புறம் நிம்மதியானாராம்..
இந்த கதைல இருந்து அந்த சாமி என்ன சொல்றாருனா ஒரு பொருளோடோ அல்லது ஒரு உயிரோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பு நம்மை நாமே அறியவும், நாம் கடவுளை அறியவும் தடையாய் இருக்கும்.. அதனால் எல்லாத்திலும் இருந்து தொடர்பற்று இருங்கள் அப்படின்னு சொல்றாரு..
உறவு என்பது எத்தனை பகைமை இருந்தாலும் உன்னதமானது.. அது ஒன்றே நம்மை இவ்வுலகில் நிலைபெறச்செய்யும்.. இந்த பூமியும் எத்தனை துன்பங்கள் நமக்கு கொடுத்தாலும்(இயற்கை சீற்றங்கள்) அதன் ஈர்ப்பு என்பது இயல்பு.. அதைப்போலவே நம் மனதின் ஈர்ப்புகளும்..அதைவிட்டு வர இயலாது.. தூக்கி எறிய முடியாது..
அதனால் தான் ஆன்மிகம் சொன்னதிற்கு கொஞ்சம் கிண்டலாய் பற்றற்று இருக்க புவி ஈர்ப்பின் வேரை தேடுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.. :-)
ஆன்மிக பக்தர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.. சற்றே ஒரு கருத்து வெளிப்பாடு.. அவ்வளவு தான்..
நன்றி வசந்த்..
தெளிவான சிந்தனைக்கவிதை
வாழ்த்துக்கள்
சூரியன்
நன்றி சூர்யநிலா..
எப்படிங்க இப்படியெல்லாம் :)
வழக்கம் போல நட்டு கழண்டுடுச்சு .. :P
Post a Comment