வேலையற்ற பொழுதொன்றில்
கவிதை எழுதலாமென்று
காகிதமெடுத்தேன்..
எந்தவொரு பாடுபொருளுமின்றி
எதைப்பற்றியென
சலனமற்றிருந்தேன்..
நீண்டு கொண்டிருந்த
நேரத்தின் நடுவில்
கவிதையே சிக்கியது
பாடுபொருளாய்..
எழுத முனைந்த
கட்டையின் நுனியில்
கண்ணீர்த் துளிகள்..
எழுத எழுத
கண்ணீரைச்
சொரிந்தது கவிதை..
காரணம் கேட்டேன்..
பிழைப்புக்காகவும்
பொழுது போக்கிற்காகவும்
தண்டிக்கப்படுவதாய்
கவிதையழுதது..
இல்லையென்று மறுத்தேன்..
ஆமென்று சாதித்தது..
தொண்டைச் செருமலுடன்
கம்பனிலிருந்து
கண்ணதாசன்வரை
எடுத்துக்காட்டினேன்..
மௌனமாய் இருந்தது..
பின் மெதுவாய்க் கேட்டது..
"நீ அவர்களில்லையே??"
மௌனமாய் இருந்தேன்..
கண்ணீரில்
காகிதம் நனைய
எழுதி முடித்தேன்..
வாங்க..
கவிதை எழுதலாம்..
Sunday, February 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ம்.. எழுதலாம்..
word verification eduthu vidu pa..
எதோ கோபத்துல கமெண்ட் போட்டா மாதிரி இருக்கு????????
word verfication????
Done.. :)
என்ன ஆச்சு ???
இதன் மூல காரணம் யாரு?
ஹா ஹா ஹா.. சில கவிதைகள்.. அதில் என்னோடதும்.. மற்றும் நான்..
(பரவால்லையே.. எதோ நடந்துருக்குனு கணிச்சுருக்கிங்க.. ;-) )
Post a Comment