Saturday, March 6, 2010

காத்திருக்கும் கவிதைகள்..

உனக்காகத்தான்
காத்திருக்கிறோம்
நானுமென் கவிதைகளும்…

காத்திருப்பின் நீளம்
நீண்டபோதும்
இன்னும் களைப்படையாமல்…

என்னைப் போலவே
என் கவிதைகளுக்கும்
நிறைய எதிர்பார்ப்புகள்..

உன் காதலை
எதிர்நோக்கி நான்..
அதன் வார்ப்புகள்
எதிர்நோக்கியென் கவிதைகள்..

எப்போதென்
காகிதம் வருகிறாய்
கவிதையாய்ப் படர..?

1 comment:

Unknown said...

wooow....

நீங்க யாரையும் காதலிக்கிறிங்களானு அடுத்து வருகிற எவரும் கேட்கட்டும் :)