Saturday, March 6, 2010

மனிதனும் கவிதைகளும்..

அனுவின் நுட்பத்திலிருந்து
அண்டத்தின் எல்லைவரை
கொட்டிக்கிடக்கின்றன கவிதைகள்..

அசையும் பொருள்களிடத்தும்
அசையாத உயிர்களிடத்தும்
அவை ஒளிந்திருக்கின்றன..

புலனடக்காத மனிதனுக்கு
காண்பவையெல்லம் கவிதைகள்..
புலனடக்கிய ஞானிக்கு
கவிதையெல்லாம் கற்பனைகள்..

கற்பை யழிக்கும்
கவிஞனிடத்தில் கைதியாகவும்
புனிதம் பிரசவிக்கும்
புலவனிடம் காதலியாகவும்
அவை ஆளப்படுகின்றன..

உருக் கொடுக்கப்பட்ட
கவிதைகளுக்கு – சிலரால்
வாழ்த்து தூவப்படுகிறது..
மற்றும் பலரால்
வாய்க்கரிசி திணிக்கப்படுகிறது..

இப்படியாக
மனிதனும் கவிதைகளும்..

1 comment:

Unknown said...

// கற்பை யழிக்கும்
கவிஞனிடத்தில் கைதியாகவும்
புனிதம் பிரசவிக்கும்
புலவனிடம் காதலியாகவும்
அவை ஆளப்படுகின்றன.. // !!!

// உருக் கொடுக்கப்பட்ட
கவிதைகளுக்கு – சிலரால்
வாழ்த்து தூவப்படுகிறது..
மற்றும் பலரால்
வாய்க்கரிசி திணிக்கப்படுகிறது..// :)))