Thursday, September 11, 2008

எங்கே என் தமிழன்??

இன்று என்னைப்
பெண் பார்க்கும் படலம்..

"பூச்சூடி பட்டுப்புடவை உடுத்தி
பத்துபவுன் நகை போட்டு
பெண்ணாய் பாந்தமாய் இரு"
- தாயின் கட்டளை..

"பெரியவர்களைப் பார்த்ததும் சின்ன
புன்னகையோடு இருகை கூப்பி
பணிவாய் விழுந்து நமஸ்கரி"
- தந்தையின் புத்திமதி..

"தனியாகப் பேசக் கூப்பிட்டால்
தண்ணி,தம் பழக்கமிருக்கா என்று
தத்துபித்துனு தயவுசெய்து உளறாதே"
- தமக்கையின் கெஞ்சல்..

மாடர்ன் உலகத்தில் இதெல்லாம்
முடியாதென்று மறுத்த என்னை
சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார்கள்..

வண்டிச்சத்தம் கேட்டதும் அனைவரும்
வாசலுக்கு ஓடி வரவேற்க
வசதியான ஜன்னலுக்கு தாவினேன் நான்..

கடைசியாய் இறங்கினார் மாபிள்ளை..
கலைந்த தலையில் coloring..
கண்களில் cooling glass..
முகத்தில் மெல்லிய make-up..
முக்கியமாய் எதிர்பார்த்த மீசை missing..
சிவப்புத் தோலுக்கேற்ற shirt,jeans..

சிரிக்கவேண்டுமென்றால் காசு கேட்பேனென்று
வீட்டுக்குள் நுழைந்தவனை ஏனோ
விழியிலேயே நிறுத்திய மனது,
இதய வாசல்களை இறுக்க மூடி
இறைவனைக் கேட்டது - "எங்கே
இருக்கிறான் என் கறுப்புத்தமிழன் " என்று..

No comments: