உயிரைத் தொட்ட வார்த்தைகளுள்
உணர்வைக்கிழித்த முதல் வார்த்தை..
கன்னத்தில் வழியும் நீரை
கேள்விக்குறியோடு நோக்கிய சிலர்..
கேட்க துணிவில்லாமல் அவர்கள்..
துடைக்க விருப்பமில்லாமல் நான்..
கதறமுடியாத இயலாமை..
காட்சிப்பொருளாய் நான்..
ஏனென்ற என் கேள்விக்கு
எனக்கே விடை தெரியவில்லை..
தனியறையில் பதுங்கி
தலை கணக்கும்வரை கதறுகிறேன்..
விரல்கள் படர கைகளுமில்லை..
வேடிக்கை பார்க்க ஆட்களுமில்லை..
இதயத்தில் ரணமாய் வார்த்தைகள்..
இமைகளில் ஆறுதலாய் கண்ணீர்..
இரவுப் பூச்சிகளின் சமாதானம்,
இதமான காற்றலைகளின் மொழிகள்,
எதுவுமே காதில் விழவில்லை
காயபடுத்திய வார்த்தைகள் தவிர..
வார்த்தைகள் உன்னுடையதென்பதால் தான்
வலியோடு வழிகிறது கண்ணீர்..
காவிரி வற்றலாம்.. என்
கண்ணீர் வற்றாது.. உன்
வார்த்தைகள் இருக்கும் வரை..
Saturday, September 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான கவிதை... வாழ்த்துக்கள். ..
தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராம்குமார்...:)))
Post a Comment