Tuesday, September 16, 2008

தாமிரபரணி ஆற்றுப்பாலம்..

இன்றோ நாளையோஎன இறக்கும் தருவாயில் நான்..
இருந்தாலும் பரவாயில்லை என்று என்மேல்
நம்பிக்கையோடு நகர்ந்துசெல்வது சக்கரங்கலாயினும்
நடுக்கத்துடன் பயணிப்பது என்னவோ நல்லுயிர்கள்..

காரை பெயர்ந்து கைப்பிடி உடைந்து
குற்றுயிரும் குலைஉயிருமாய் இருந்த நான்,
கொஞ்ச நாளில் புறக்கணிக்கபடுவேன் என்று
களிப்புடன் இருக்கையில் என்
கிழிசல்களுக்கு தையலிட்ட மோசக்காரன் யாரோ?

தையல்கள் என் சுமைகளைத் தாங்குமா
தெரியவில்லை..அடுத்த தையலுக்குள் எனக்கொரு
அவப்பெயர் வாங்க விருப்பமில்லை ஆதலால்
ஆயுளை முடித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்..
அதற்குள் உருப்பெருமா அடுத்த பாலம்?

ஊர்களோடு உயிர்களையும் இணைக்கவே
உறவுப்பாழமை பூத்த நான்
உயிர்களைக் கொன்று உதிரும்முன்
உருவாகுமா எனக்கான மாற்றுப்பாலம்?

நான்கு பேராவாது மடிந்தால் தான்
நான் நிமிர்ந்து பார்ப்பேன் என்று
விழிகள் மூடும் அரசாங்கம்..
வேறென்ன இயலும் என்னால்??

இருக்கும்வரை இறைவனை வேண்டுவேன்
என்னுடைய மரணம் எனக்கானதாய் மட்டுமே
இருக்க வேண்டும் என்று..

1 comment:

Chockalingam said...

indha kavidhai yaarodadhu???