வேகாத வெயில்ல தண்ணிஎடுக்க போகையில
வேப்பமரத்தடியில வெகுநேரமா காத்துநின்னு
வெள்ளரிப்பிஞ்சு கொடுத்தியே நெனவிருக்கா?
பத்துநாளா காணோமின்னு பரிதவிச்சு போயி
பம்பு வாங்கற சாக்குல என்னப்
பாசமாப் பாக்க வந்தியே நெனவிருக்கா?
களத்துமேட்டுக்கு கஞ்சி கொண்டு போகையில
கம்மாயில வழிமறிச்சு கையில காயிதங்குடுத்து
காதலிக்கறேன்னு சொன்னியே நெனவிருக்கா?
சீமைக்கு போறன்னதும் சின்னபுள்ளையா அழ
சிவபெருமான் சாட்சியா குங்குமங்கொடுத்து
சீக்கிரமே வந்துருவேன்னு சிரிக்கவச்சியே நெனவிருக்கா?
ஆறுமாசங்கழிச்சு அய்யனாரு கோயில்ல
ஆத்தாவுக்கு கட்டுப்பட்டு அடுத்தவள கட்டப்போறன்னு
அழுத எனக்கு ஆறுதல் சொன்னியே, நெனவிருக்கா?
நெனச்சபடி இருந்த நேரங்கலஎல்லாம்
நெனக்கவே கூடாதுன்னு நெனச்சாலும்
நெனவுகளச் சுமந்த காத்தும் ஊரும்
நெறைய கதை பேசுது...
ஆம்பள உன் கண்தொடைக்க ஆயிரந்துணையிருக்கு
சிறுக்கி எஞ்சோகத்துக்கு சொகமா
உன்நெனப்ப தவிர வேறென்ன இருக்கு?????
Tuesday, September 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கவிதை ரெம்ப நல்ல இருக்கு
idhu vairamuthu kavithayaaa?
Post a Comment