Monday, March 15, 2010

விம்மும் திண்ணை..

சாரைகளுக்கும்
விரியன்களுக்குமான
நகரப்பாதையொன்று
அடைபடுகிறது..

நாகத்தகடு அம்மனுக்கும்,
வெற்றிலை குதப்பும்
குடுகுடுப்பைக்காரனுக்கும்
வேலியெழும்புகிறது..

கண்ணாமூச்சியாடும்
குழந்தைக்கும்,
காதல் கொணரும் தென்றலுக்கும்
கதவுகள் போடப்படுகிறது..

வீட்டைச் சுற்றியுயரும்
சுவர்களின் மறைவில்,
விசாரிப்புகளேதுமின்றி
விம்முகிறது திண்ணையொன்று ..

2 comments:

Rajthilak said...

பாதி புரியுது, மீதி புரியவில்லை ....

சுரபி said...

வேற ஒண்ணும் இல்ல, எங்க வீட்டுக்கு காம்பௌன்ட் சுவர் கட்டறாங்க..
அது தான் மேட்டர்.. :)

பாம்புகள், குறி சொல்பவர்கள், பக்திவேடமிட்டு வசூல் செய்யும் வழிப்போக்கர்கள், ஊரிலுள்ள குழந்தைகள் - இவர்களது வருகையை தடுத்தவாறு சுற்றுச்சுவர் ஒன்று எழுப்பபடுகிறது ஒரு வீட்டுக்கு... இவர்கள் வரவற்ற தனிமையில் திண்ணை அழுவதாய் கவிதை முடிகிறது... :)

பாம்புகள் நுழையும் வீடுகள் ....இது எங்கே நடக்குதுன்னு யோசிக்காதீங்க.. எங்க ஊர்ல இது சகஜம்.. வீட்டுக்குள்ளயே இருந்தாலும் யாரும் கண்டுக்கமாட்டாங்க.. (என்ன தவிர..)