Monday, March 29, 2010

ஊடலின் மௌன வலிகள்..

அறையின் ஓரமாய்
கதறித் திரிகின்றன
அவள்
கூந்தல் இறங்கிய
கற்றைகள் சில...

சுவரோரங்களில்
தேம்புகின்றன
அவள்
சுவாசம் படர்ந்த
ஒட்டடைகள் சில..

எதிர்பார்ப்புகள் தேக்கி
காத்திருக்கின்றன
அவள்
வாய்மொழி கேட்ட
சுவர்க்கோழிகள் சில..

அவளோ
மௌனத்தைப்
போர்த்திக்கொள்கிறாள்
இன்றும்..

நீண்டுகொண்டிருக்கும்
இரவின் - அடர்ந்த
மௌனத்தின் வலியில்
புலம்பித் தீர்க்கின்றன
பூச்சுக்கள் உதிர்ந்த
செங்கல்கள் சிலவும்,
விருப்பங்கள் காய்ந்த
செல்கள் பலவும்..

2 comments:

சுரபி said...

இதுவும் தலைப்பிட்டு கவிதை எழுதும் போட்டிக்காய் எழுதியது..
"மௌனம்" என்ற தலைப்பில்..

சுரபி said...

நன்றி திண்ணை...